
இயற்கை கட்டளை
இயற்கை ஆற்றல் எண்ணற் கரிதென
ஏக்கம் கொண்டு தூக்கம் இன்றி
ஆய்வினைத் தேடி அலையும் மக்கள்
அடக்கம் பெற்றவர் ஆயிரம் கோடி
அமைதித் தேடி அலைந்து திரிந்து
அன்பே சிவமென அடங்கி ஒடுங்கி
இன்பம் கண்டவர் இறைவன் ஆனது
எங்கும் காண்க எத்தனை வேற்றுமை
புத்தர் சமணர் நபிகள் ஏசென
இறைவனைத் தேடினோர் இறைவன் ஆனதால்
ஒற்றுமை குலைந்து வேற்றுமைத் தேடி
திரியும் மக்கள் ஒற்றுமை காண
எரியும் நெருப்பினில் அன்பினை ஊட்டுக
இயற்கை வளங்கள் நிறைந்த புவிதனில்
செயற்கை கழிவினை அகற்றிட வேண்டும்
தாவர இனங்கள் தழைத்திட வேண்டும்
தாயின் பாசம் தவழ்ந்திட வேண்டும்
பறப்பன ஊர்வன நடப்பன யாவும்
நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்
துயரம் நீங்கி வாழ்ந்திட வேண்டும்
புவியில் பிறந்த அத்தனை உயிர்களும்
ஒன்றை சார்ந்து ஒன்றி இருப்பது
இயற்கை கட்டளை இதுதான் வாழ்க்கை
என்றறி நீயும் நானும்
ஒன்று படுவோம் அன்பின் வடிவிலே.
No posts
No posts
No posts
No posts
Comments