
வாழ்வது என்பது ஓர் கலை,
அதற்கு முழு அன்பே விலை,
உணர்ந்தால் இன்ப நிலை,
அன்புக்கு எல்லை இல்லை!
தனிமை தராது இனிமை,
இது உலகம் அறிந்த உண்மை,
காட்டாற்று வெள்ளம் ஆண்மை,
அணை பெண்ணின் மென்மை!
வாழ்வில் இணைந்த பின்பு,
பெண்ணின் கண் அம்பு,
பாய விளையும் அன்பு,
உடனே வந்திடும் தெம்பு!
இளமை மாறுது மாயமாய்,
துணை தேவை நியாயமாய்,
கன்னி கிடைப்பாள் தானமாய்,
மணக்கின்றனர் காலம் காலமாய்!
திருமணம் கடவுள் முடிவு,
அது தனிமைக்கு விடிவு,
பெண் சக்தியின் முழு வடிவு,
அவளால் வரும் துணிவு!
சொர்க்கத்தின் முடிவே திருமணங்கள்,
பூ மாலைகள் தரும் நறுமணங்கள்,
மகிழ்ச்சி அடையும் இரு மனங்கள்,
விட்டு அகன்றிடும் மன கனங்கள்!
இன்பமாய் இணைவர் இருவர்,
ஒன்றாய் ஆனந்தம் பெறுவர்,
வாழ்வில் ஒருவருக்கொருவர்,
அன்போடு சேவை புரிவர்!
பெண்ணும், ஆணும் கை கோர்த்து,
ஒன்றாய் முயன்று நிம்மதி சேர்த்து,
குடும்பத்தை கண்ணாய் காத்து,
வாழ வேண்டும் தெய்வம் சேவித்து!
பெண் வர பெற்றோரைப் பிரிந்து,
அவள் மனதை மிக நன்கு புரிந்து,
அவளுக்காக அன்பு மூலம் பரிந்து,
வாழ வேண்டும் மனம் தெரிந்து!
வேதங்கள் ஓதட்டும் தெய்வ சொற்களை,
புனித தாலி சேர்க்கட்டும் மண மக்களை,
எல்லோரும் தூவட்டும் மலர் பூக்களை,
காக்கட்டும் மணவாளன் நங்கை அவளை!
எம் வி வெங்கட்டராமன்
No posts
No posts
No posts
No posts
Comments