
0 Bookmarks 108 Reads0 Likes
திருப்பள்ளி யெழுச்சி
நற்பெரு மார்கழி மாதமோர் காலை
நமதுநற் பாரதி யாரோடு நாங்கள்
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்
பெற்ற முதுவய(து) அன்னையார் ஐயரே
பீடு /தரும்"திருப்/பள்ளி/யெழுச்சி"தான்/
சொற்றிறத்தோடுநீர் பாடித் தருகெனத்
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே
நீல மணியிருட் காலை அமைதியில்
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின்
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்,
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,
காலை மலரக் கவிதை மலர்ந்தது
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது
ஞானப் பொழுது புலர்ந்த தென் றார்ந்த
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே. (6:2)
No posts
No posts
No posts
No posts
Comments