உழவர் நிலை's image
Share0 Bookmarks 57 Reads0 Likes

ஆருயிர்  காக்கும்  சீருடல்  பேணும் 

காரினை  நோக்கும்  கதிர்விளை  வாக்கும் 

வினையில்   சிறந்தது   உழவெனப்  படுமே 

பனைத்துணை   அளவுப்  பசிப்பிணி   தோன்றினும் 

சினைத்துணை  அளவாய்   கொள்வர்  எனினும் 

மனைவி  மக்கள்  துயரினைத் தாங்கார் 

உலகினர்  யாவரும்  உண்டு  மகிழ்ந்திட 

உணவினை  வழங்கும்  உழவர் 

கணத்தினில்   எடுப்பது  தற்கொலை  முடிவே.No posts

Comments

No posts

No posts

No posts

No posts