
இயற்கை
இயற்கையே உன்னழகைக் காண்ப தற்கே
என்னைநீ படைத்தாயோ விந்தை செய்தாய்
வியந்திடவே பகலிரவை தோற்று வித்தாய்
விளையாட்டாய் பல்லுயிர்கள் படைத்து விட்டாய்
விருந்தெனவே தாவரங்கள் தோன்றும் காட்சி
வண்ணமிகு விண்மீன்கள் நிலவும் சாட்சி
வினைமுற்றாய் மனிதனைதான் படைத்த தாலே
விதவிதமாய் கழிவுகளை சேர்த்து விட்டான்
மாறி பெய்யுதையா மாரி
விளைநிலத்தை மனைநிலமாய் மாற்றி விட்டாய்
விண்மாரி பொய்த்ததென்றே தூற்று கின்றாய்
களைந்தெடுத்தாய் காட்டிலுள்ள மரத்தையெல்லாம்
கதிர்தந்த விளைநிலத்தை நகரம் என்றாய்
தெளிநீரில் கழிநீரை கலந்தே விட்டாய்
தெருவெங்கும் குடிநீரை தேடு கின்றாய்
தெளிவின்றி மனிதாநீ உள்ள தாலே
திசைமாறி பெய்யுதையா மாரி தானே
No posts
No posts
No posts
No posts
Comments