
வெற்றிக்கு ஒரே வழி முயற்சி ஒன்றே,
திருவள்ளுவர் சொன்னார் அன்றே,
,தோல்வி அது போய்விட அகன்றே
முயலுக பொறுமையாக நின்றே!
செய்தால் திரும்பத் திரும்ப,
வெற்றி அது பின் அரும்ப,
நம்மை உலகம் விரும்ப,
நம்மைப் புகழ கிளம்ப!
பொறுமை உயர்ந்த ஆபரணம்,
அது உருவாக்கும் நல்ல தருணம்,
வகுக்கும் வெற்றிக்கு இலக்கணம்,
அதுவே நம் தேவை இக்கணம்!
முயற்சி எடுப்பது நிச்சயம் அவசியம்,
அதுவே வெற்றியின் உண்மை ரகசியம்,
வெற்றியை மயக்க கொண்டது வசியம்,
முயற்சி நிகழ்த்தும் நிச்சயம் அதிசயம்!
தோல்வி கண்டு துவளாத மனம்,
கொள்ள வேண்டும் மனித இனம்,
பயத்தால் மனம் ஆகும் வனம்,
பின் வாழ்வாகும் பாலைவனம்?
தைரியம் கொண்டு வேலை செய்து,
மிகப்பல வெற்றிகளை கொய்து,
லாவகமாக வாழ்வை நெய்து,
வாழ்க வியர்வை மழை பெய்து!
தொடர்ந்து கடமைதனை செய்க,
நல்ல பாதையில் என்றும் செல்க,,
எடுத்த காரியங்களில் வெல்க,
வீர நடையுடன் வாழ்க, வளர்க!
கடைபிடித்தால் வள்ளுவர் வழியை,
அவர் திறப்பார் நம் அறிவு விழியை,
நெஞ்சில் வைக்க அவர் மொழியை,
குறள் சுட்டிக்காட்டும் மேடு,குழியை!
நல்ல வழிகளை கடைபிடித்து,
பிறர் மனதில் இடம் பிடித்து,
உலகம் உய்ய வழி படைத்து,
உதவுவோம் அன்பை கொடுத்து!
கடவுள் மீது பாரத்தை போட்டு,
உழைத்து பல வரங்கள் கேட்டு,
இறைவா நல்ல வழி காட்டு,
எனக்கூறி பாடுக புனித பாட்டு!
எம் வி வெங்கட்டராமன்
No posts
No posts
No posts
No posts
Comments