
Share0 Bookmarks 17 Reads0 Likes
உயர்ந்த நாக்கு சொல்லும் சொல் வேதவாக்கு!
-
எதிர் நீச்சல் போட தேவை மனத்துணிச்சல்!
-
பயம் கொண்டால் வராது ஜெயம்!
-
ராஜ்ஜியம் இருந்தும் ஐயத்தால் பூஜ்ஜியம்!
-
சோகமும் மேகமும் கலையும் வேகமாய்!
-
தலை உள்ளவரை இருக்கும் கவலை!
-
அறிவுச்சுடர் தடுக்கும் இடர்!
-
படிக்காத மேதை காட்டுவான் பாதை!
-
உழைத்தால் முன்னேற்றம், இல்லையென்றால் ஏமாற்றம்!
-
காதல் தெய்வீகம், இதயத்தின் யாகம்!
-
அன்பைப் பொழி, வெறுப்பை அழி!
-
விதியின் சதியை வெல்லும் மதி!
-
வெறும் படிப்பு, நெருப்பில்லா அடுப்பு!
-
எம் வி வெங்கட்டராமன்
No posts
No posts
No posts
No posts
Comments