
அந்த ஆங்கிலேய நரி,
சுதந்திரத்திற்கு எதிரி,
கொண்டான் நிர்வாக வெறி,
எதிர்த்தது இவன் கவிதை வரி!
எங்கும் ஆங்கிலேய ஆதிக்கம்,
அவன் பலத்தின் பெருக்கம்,
மகாகவி மனதில் துக்கம்,
வாட்டியது சுதந்திர ஏக்கம்!
எதிலும் ஆங்கிலேயன் முதல்,
தேவை அவனோடு மோதல்,
தொழிலோ பாடல் செய்தல்,
பாடலை அம்பாய் எய்தல்!
உதவி செய்தாள் செந்தமிழ்,
வந்தது பத்திரிகை இதழ்,
எழுதினான், "ஆட்சியை கவிழ்"
பெற்றான் கவிஞன் புகழ்!
-
அந்த ஆங்கிலேயன் நடுநடுங்க,
முயல இவன் சுதந்திரம் பிடுங்க,
தலைவர்கள் இவனை வணங்க,
ஆங்கிலேயன் பயந்தான் உறங்க!
பேனாவே இவன் துப்பாக்கி,
சுட்டான் எதிரியை நோக்கி,
அது எதிரியை சரியாய் தாக்கி,
வழி செய்தது பயம் போக்கி!
தமிழ் போட்டது புரியாப் புதிர்,
எரித்தது எதிரியை அறிவுச் சுடர்,
கொடுத்தனர் எதிரிகள் ஆயிரம் இடர்,
கொந்தளித்தது சென்னை மாநகர்!
பல இன்னல்கள் வருத்த,
நிஜத்துப்பாக்கி துரத்த,
முயல இவனை சிறையில் நிறுத்த,
முயன்றான் ஆங்கிலேயனை திருத்த!
இவன் யானைக்கு உணவு படைக்க,
அது பயந்து இவனை அடிக்க,
உடல் துடிக்க இவன் படுக்க,
தமிழ் அன்னை காத்தாள் கால் கடுக்க!
பிரிந்தது இவன் மூச்சு,
முடிந்தது பேனா வீச்சு,
ஒரு நாள் சுதந்திரம் நிஜமாச்சு,
நாட்டில் இன்னும் இவன் பேச்சு!
எம் வி வெங்கட்டராமன்
,
No posts
No posts
No posts
No posts
Comments